தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2.52 கோடி அபராதம் வசூல்

0 1631
தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2.52 கோடி அபராதம் வசூல்

மிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது ஆகிய விதிமீறல்களுக்காக நேற்று வரை 2 கோடியே 78 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கப் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பின்பற்றாதோரிடம் 200 ரூபாய் அபராதம் பெறப்படுகிறது.

நேற்று வரை சென்னை தவிரப் பிற பகுதிகளில் முகக்கவசம் அணியாததற்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் வழக்குகள் பதிந்து, 2 கோடியே 52 லட்சத்து 34ஆயிரம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.

இதேபோல் சமூக இடைவெளி கடைப்பிடிக்காததற்காகச் சென்னை தவிரப் பிற பகுதிகளில் ஆறாயிரத்து 465 வழக்குகள் பதிந்து 25 லட்சத்துத் தொண்ணூறாயிரம் ரூபாய் அபராதமாகப் பெறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments