கொரோனா தடுப்பு நடவடிக்கை.. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

0 5127
தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னைத் தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னைத் தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா சோதனை, தொடர்புகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்தல், சிகிச்சை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவிப்பது எனத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இயக்கமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் பற்றிச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைமைச் செயலாளர், நலவாழ்வுத்துறை, வருவாய்த்துறைச் செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதில் கொரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றச்செய்வது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments