ககன்யான் விண்வெளித் திட்டத்திற்க்காக ரஷ்யாவில் பயிற்சிபெற்ற 4 விமானிகளுக்கு இந்தியாவிலும் பயிற்சி..!

0 837
ககன்யான் விண்வெளித் திட்டத்திற்க்காக ரஷ்யாவில் பயிற்சிபெற்ற 4 விமானிகளுக்கு இந்தியாவிலும் பயிற்சி..!

கன்யான் விண்வெளித் திட்டத்திற்க்காக ரஷ்யாவில் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய விமானிகள் 4 பேருக்கு இந்தியாவிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக இந்திய விமானப்படையின் பயிற்சி விமானிகள் 4 பேரை இஸ்ரோ தேர்ந்தெடுத்து ரஷ்யாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பியது.

அங்கு ரஷ்ய விண்வெளித்துறை மூலம் பயிற்சி பெற்ற அவர்கள் பெங்களூருக்குத் திரும்பியுள்ளனர். நாட்டின் பல்வேறு நகரங்களில் அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தேசியக் கடல்சார் தொழில்நுட்ப மையத்தில் தண்ணீரில் மிதக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், இதற்காக முப்படைகளின் உதவியைக் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவப் பயிற்சி, உளவியல் பயிற்சி, விமானத்தில் பறக்கும் பயிற்சி ஆகியன அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments