ஸ்புட்னிக் தடுப்பூசியின் அவரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்படுமா? - நிபுணர் குழு இன்று முடிவு..

0 1498
ரஷ்ய ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அவரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்குவது பற்றி மத்திய அரசின் தடுப்பூசி நிபுணர் குழு இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

ரஷ்ய  ஸ்புட்னிக்  தடுப்பூசிக்கு அவரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்குவது பற்றி மத்திய அரசின் தடுப்பூசி நிபுணர் குழு இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் சோதிக்கவும், விநியோகம் செய்யவும்  ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

அவசரகால அனுமதிக்கு ஒப்புதல் தர வேண்டி, இந்த நிறுவனம் கடந்த மாதம் தடுப்பூசி குறித்த சோதனை தரவுகளை நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்தது.

ஆனாலும் RT-PCR சோதனைகளில் பாசிடிவ் ஆக வரும் நபர்களிடம் இந்த தடுப்பூசியை சோதனை செய்து, ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அளிக்குமாறு டாக்டர் ரெட்டிஸ் லேப் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டது. ஸ்புட்னிக் தடுப்பூசி  91.6 சதவிகிதம் திறனுள்ளது என 3 ஆம் கட்ட சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments