பட்டப்பகலில் கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று 11 சரவன் தாலி செயின் பறிக்க முயற்சி: பதறவைக்கும் CCTV காட்சிகள் வெளியீடு

0 7626
பட்டப்பகலில் கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று 11 சரவன் தாலி செயின் பறிக்க முயற்சி: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை அடுத்த பல்லாவரத்தில் பட்டப்பகலில் 8 மாத கர்ப்பிணியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, 11 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறிக்க முயன்ற பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரேணுகா நகரை சேர்ந்த கீதா, வீட்டு வாசலிலுள்ள பிள்ளையார் கோயிலில், சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேரில், ஒருவன் மட்டும் இறங்கி வந்து, கீதாவிடம் இருந்து செயினை பறிக்க முயற்சித்தான்.

சுதாரித்துக் கொண்ட கீதா, செயினை விடாமல் போராடிய நிலையில், அவரை கீழே தள்ளிவிட்ட மர்ம நபர், சாலையில் தரதரவென இழுத்துச் சென்றான்.

கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால், செயின் பறிக்கும் முயற்சியை கைவிட்டு, தனது கூட்டாளிகளுடன் பைக்கில் தப்பி ஓடியவனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments