அக்டோபருக்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

0 1399
இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிராக மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.இந்த நிலையில் ஸ்புட்னிக் வி, ஜான்சன்அண்ட் ஜான்சன், Novavax , Zydus Cadila, Intranasal ஆகிய 5 தடுப்பூசிகள் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

நடைமுறைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூனிலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஆகஸ்டிலும், ஜைடஸ் காடிலா தடுப்பூசி ஆகஸ்ட்டிலும், நோவாக்ஸ் தடுப்பூசி செப்டம்பரிலும், நாசல் தடுப்பூசி அக்டோபரிலும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments