தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி...

0 1844
நாடு தழுவிய மூன்று நாள் தடுப்பூசி முகாமில் முதல் நாளிலேயே 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாடு தழுவிய மூன்று நாள் தடுப்பூசி முகாமில் முதல் நாளிலேயே 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது நாளாக ஒன்றரை லட்சத்தும் மேலாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தும் சூழலில் இது மிகப்பெரிய முன்னேற்றமாக காணப்படுகிறது.

மகாராஷ்ட்ரா, சட்டிஸ்கர், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய 5  மாநிலங்களில் மட்டுமே 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களிடம் நடத்திய கலந்துரையாடலின் போது வலியுறுத்தி திக்கா உத்சவ் எனும் தடுப்பூசி முகாம்களை மூன்று நாட்களுக்கு நடத்தும்படி கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு மாநில அரசுகள் நெருக்குதல் கொடுத்து வரும் நிலையில் முதல் நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட 27 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments