மேற்கு வங்கத்தில் 5 ஆம் கட்ட தேர்தலையொட்டி ராகுல் காந்தி வருகிற 14ம் தேதி முதல் பிரச்சாரம்

0 719
மேற்கு வங்கத்தில் 5ஆம் கட்ட தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி வருகிற 14ந்தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

மேற்கு வங்கத்தில் 5ஆம் கட்ட தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி வருகிற 14ந்தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே 4 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் 5-ஆம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 14 ந்தேதி முதல் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோல்போகர் மற்றும் மதிகாரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments