மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் உத்தவ் தாக்கரே அரசு இன்று முடிவு

0 2154
மகாராஷ்ட்ராவில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிராவில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது குறைந்தது 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு உத்தவ் தாக்கரே 2 முதல் 3 வாரங்கள் வரை முழு ஊரடங்கை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆயினும் இந்த பொதுமுடக்கம் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகே அமலுக்கு வரும் என்றும் அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் நவராத்திரி உள்ளிட்ட திருவிழாக்கள் தொடங்கியுள்ள சூழ்நிலையில் பொது முடக்கம் என்பது பண்பாட்டு ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 63 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரே நாளில் 349 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments