ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் அபூர்வமாக ஏற்படும் ரத்த உறைதல்

0 2221
ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் அபூர்வமாக ஏற்படும் ரத்த உறைதல்

ஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்களில் அபூர்வமாக சிலருக்கு ரத்த உறைதல் ஏற்படுவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி மற்றும் நார்வேயில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்பவர்களின் உடலில் ரத்த உறைதலுக்கு காரணமான பிளேட்லெட்கள் என்னும் செல்களை ஊக்குவிக்கும் ஆன்டிபாடீஸ் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரத்தம் உறைதலுக்கான வேறு எந்த காரணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் காணப்படாததால், தடுப்பூசியே காரணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக பலநாடுகளில் இந்த தடுப்பூசி போடப்படாததால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments