ஏப்ரல் 17ஆம் தேதி பிலிப்பின் இறுதிச்சடங்கு..!

0 2709
ஏப்ரல் 17ஆம் தேதி பிலிப்பின் இறுதிச்சடங்கு..!

ங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் எடின்பெர்க் (Edinburgh)இளவரசருமான பிலிப்பின் இறுதி சடங்கு வரும் 17 ஆம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இந்நிலையில் பிலிப்பின் இறுதி சடங்கு விண்டசர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சிற்றாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக Canterbury உள்ள கத்தீட்ரலில் அவருக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அரச குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ளனர்.

இறுதி சடங்கு நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இங்கிலாந்து நேரப்படி மதியம் 3 மணிக்கு இளவரசர் பிலிப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இறுதிச்சடங்கு நிகழ்வில், கிரனடியர் கார்ட்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பிரிவினரின் பேண்ட் வாத்தியங்கள் அணி வகுப்பு எட்டு நிமிடங்கள் நடைபெறும்.

இளவரச் பிலிப்பின் இறுதி சடங்கில் அரச குடும்பத்திலிருந்து விலகி ஹாரி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மனைவி மேகன் கர்ப்பமாக இருப்பதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments