ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..!

0 1399
ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..!

ந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் கைலீட் சயின்சஸ் நிறுவனம் கண்டுபிடித்த ரெம்டிசிவிர் மருந்து வைரஸ்களை அழிக்கும் தன்மை கொண்டதாகும். கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை ஊசிமூலம் செலுத்தினால் வைரஸ்களை அழித்து நோயின் பாதிப்பைக் கட்டுப்படுத்தும். இந்தியாவில் இந்த மருந்தைத் தயாரிக்கவும் விற்கவும் சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள நிலையில் ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடு எனவும், அதைப் பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையும் வரை ரெம்டிசிவிர் மருந்தையும், அதைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரெம்டிசிவிர் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விற்பனையாளர்களின் விவரங்களைத் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனை ஆகியவற்றைத் தடுக்க மருந்து ஆய்வாளர்கள் சோதனை செய்து இருப்பு விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

வரும் நாட்களில் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் ரெம்டிசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்கும்படி தயாரிப்பு நிறுவனங்களிடம் மருந்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே நாக்பூருக்கு 10ஆயிரம் ரெம்டிசிவிர் மருந்துகளை அனுப்ப வேண்டும் என சன் பார்மா நிறுவனத்திடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார். உடனடியாக ஐயாயிரம் மருந்துகளையும், அடுத்த இரு நாட்களில் மேலும் ஐயாயிரம் மருந்துகளையும் அனுப்புவதாக மருந்து நிறுவனம் உறுதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments