"டெல்லியில் கொரோனா 4ம் அலை பரவுகிறது அது மிகவும் அபாயகரமானது" -முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

0 2541
"டெல்லியில் கொரோனா 4ம் அலை பரவுகிறது அது மிகவும் அபாயகரமானது" -முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லியில் கொரோனா நான்காம் அலை பரவி வருகிறது என்றும் அது மிகவும் அபாயகரமானது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும் ஊரடங்கு அமல்படுத்த அரசு விரும்பவில்லை என கூறியுள்ள அவர் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

தீவிர பாதிப்புள்ளவர்களுக்காக மருத்துவமனை படுக்கைகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் எனவே தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனைக்கு விரைந்திடாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments