கண் பார்வை திறன் குறைபாடு... தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பெண்!

0 5152

ஆவடி அருகே தண்ணீர் என நினைத்து ஆசிடை குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சுமதி. இவர்களுடன் செல்வத்தின் தாயார் மேனகாவும் வசித்து வந்தார்.60வயதாகும் மேனகாவிற்கு கண் பார்வை திறன் குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது.

இதற்காக சாப்பிட்டு விட்டு சர்க்கரை நோய்க்கான மாத்திரை போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிட் பாட்டிலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். இதையடுத்து மேனகா நெஞ்செரிச்சல் ஏற்பட்டு வலியால் அலறி துடித்துள்ளார்.

மேனகாவின் வீட்டில் யாரும் இல்லாததால், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் மேனகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்வை திறன் குறைவால் தண்ணீர் என ஆசிட் குடித்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments