தலைக்கவசம் இருக்கும்போது முகக்கவசம் எதற்கு? -போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்

0 26109
தலைக்கவசம் இருக்கும்போது முகக்கவசம் எதற்கு? -போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்

"லைக்கவசம்தான் அணிந்திருக்கிறேனே, பிறகு எதற்கு முகக்கவசம் ?” எனக் கேட்டு போலீசாரிடம் இளைஞர் வாக்குவாதம் செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியது.

வள்ளலார்நகர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞரை மடக்கி அபராதம் விதித்தனர். "நான் தான் தலைக்கவசம்தான் அணிந்திருக்கிறேனே, பிறகு எதற்கு முகக்கவசம் ?” எனக் கேட்டு அந்த இளைஞர் போலீசாரிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தார்.

தலைக்கவசம் அணிந்திருந்தாலும் அதில் முழுமையான பாதுகாப்பு இருக்காது என்று கூறிய போலீசார், மூக்கையும் வாயையும் முழுவதுமாக மூடும்படியான முகக்கவசம் அணிவது கட்டாயம் என அந்த இளைஞருக்குப் புரியவைத்தனர். அருகிலிருந்த கடைக்குச் சென்று முகக்கவசம் வாங்கி அணிந்தபிறகு அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments