கோவிலில் கைவரிசை காட்டிய திருடன்..!

0 1384
கோவிலில் கைவரிசை காட்டிய திருடன்..! லுங்கியில் அள்ளிச்சென்ற பணம்

புதுச்சேரியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சியை ஆதாரமாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஜிஎன் பாளையம் பகுதியில் உள்ளது அருட்குரு தேங்காய் சுவாமிகள் சித்தர் பீடம். இங்குள்ள கோவிலில் வழக்கம் போல் இரவு நேர பூஜைகள் முடிந்த நிலையில் நடை சாத்தப்பட்டது. பின்னர் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதிகாலையில் கோவிலுக்கு வந்து பார்த்ததில் உண்டையல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த கோவில் நிர்வாகிகள் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், உண்டியல் பணத்தை கொள்ளையடித்தது பதிவானது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் மட்டும் கையில் இரும்புடன் கோவில் கதவை திறந்து உள்ளே வந்து உண்டியலை உடைப்பதும், உண்டையல் பூட்டு உடைக்கப்பட்டதும் மீண்டும் வெளியே சென்ற அந்த நபர், வெளியில் காய்ந்து கொண்டிருந்த லுங்கியை எடுத்து வந்து கீழே விரித்து அதில் உண்டியல் பணத்தை எடுத்து போடுவதும், பிறகு லுங்கியில் இருந்த பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி தான் வந்த இருசக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரம், அரும்பார்த்தபுரத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலிலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் கொள்ளைப்போனதாக புகார் எழுந்ததை அடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments