முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்..! தீவிரமடையும் நடவடிக்கை

0 3857
முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்..! தீவிரமடையும் நடவடிக்கை

மிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரமாக  முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து, அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோரிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

 கோயம்புத்தூர்:

கோவை உக்கடம் பேருந்து நிலையம் பேருந்து நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்ட சுகாதார அலுவலர்கள், அங்கு முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை கீழே இறக்கிவிட்ட அதிகாரிகள், முகக்கவசம் வாங்கி அணிந்தபின் பயணம் செய்ய அனுமதித்தனர். 

நாமக்கல்:

நாமக்கல்லில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் 200 ரூபாய் அபராதமாக வசூலித்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் அண்ணாசாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோரிடம் போலீசார் அபராதம் விதித்தனர். தியேட்டர்களில், முகக்கவசம் அணியாமல் வருவோரை திரையரங்கு நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பினர்.

 செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

கரூர்:

கரூர் பேருந்து நிலையம் அருகில் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை பாதி வழியில் இறக்கி போலீசார், அபராதம் விதித்தனர்‍. 

 கடலூர்:

கடலூர் நகரிலும் அபராதம் வசூலித்ததோடு, முகக்கவசம் அணியவேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

 

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் பகுதியிலுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் வசூலித்தனர்.

சிவகங்கை:

சிவகங்கையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் உட்பட வாகனங்களில் செல்வோரிடமும் முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

 தேனி:

தேனி - பெரியகுளம் நெடுஞ்சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ பயணிகளிடம் 200 அபராதம் விதித்த போலீசார், அவர்களை ஒன்றாக நிற்கவைத்து, ஒலிபெருக்கி வாயிலாக அறிவுரைகளையும் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments