மூன்றாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா? பாரத் பயோடெக் நிறுவனம் சோதனை

0 4084
மூன்றாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலா?

மூன்றாவது தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா என்கிற ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் தொடங்கியுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி 81 விழுக்காடு செயல்திறன் கொண்டுள்ளதாக ஏற்கெனவே நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பாற்றலை மேலும் அதிகரிக்கத் தேவையான ஆய்வுகள், மத்திய அரசின் அனுமதியோடு நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே மூன்றாம் கட்டச் சோதனையில் 27 ஆயிரம் பேருக்குத் தடுப்பு மருந்தைச் செலுத்திப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களைக் கொண்டே மூன்றாவது தவணை தடுப்பு மருந்தால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா எனக் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments