காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் 72 மணி நேர என்கவுன்ட்டர் - 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 3071
காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் 72 மணி நேர என்கவுன்ட்டர் - 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய என்கவுன்டர் முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதில் மொத்தம் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 72 மணி நேரத்தில் 4 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. டிரால் மற்றும் சோபியானில் 7 தீவிரவாதிகளும், அல் பதர் மற்றும் ஹரிபோராவில் 3 தீவிரவாதிகளும், பிஜிபெஹ்ராவில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கூட்டு என்கவுன்டர் நடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கரே தொய்பாவுடன் தொடர்பு உடையவர்கள் என்றும் அவர் கூறினார். ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments