கொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்

0 4029
கொரோனா தடுப்பூசி திருவிழா: பிரதமரின் 4 வேண்டுகோள்

நான்கு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுவதையொட்டி அதைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு நான்கு வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது பெரும்போராக நாடு முழுவதும் 4 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டும் என மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டிப் பொதுமக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலாவதாக, ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ளவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்ய வேண்டும். இரண்டாவதாக, கொரோனா சிகிச்சைக்குப் பணமில்லாமலும், அதுபற்றி அறியாமலும் இருப்பவர்களின் சிகிச்சைக்கு உதவ வேண்டும். மூன்றாவதாக, ஒவ்வொருவரும் தானும் முகக்கவசம் அணிவதுடன் மற்றவரையும் அணியச் செய்ய வேண்டும். நான்காவதாக, யாருக்கேனும் கொரோனா தொற்றுள்ளது தெரியவந்தால், அவரின் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் அங்குச் சிறிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments