இன்று முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம்

0 2269
இன்று முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி முகாம்

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததை ஏற்று இந்தியாவில் இன்று முதல் நான்கு நாட்களுக்குக் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தேவைப்படுவோருக்குத் தடுப்பூசி போட உதவவும், கொரோனா சிகிச்சைக்கு உதவவும் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழனன்று மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நான்கு நாட்களுக்குத் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதன்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையொட்டிப் பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், தேவைப்படுவோருக்குத் தடுப்பூசி போடவும், கொரோனா சிகிச்சைக்கு உதவும்படியும் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முகக்கவசம் அணிவதுடன் பிறரையும் அணியும்படி தூண்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். யாருக்காவது கொரோனா இருந்தால் அங்குக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நான்கு நாள் முகாமில் தடுப்பு மருந்துகளை வீணாக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments