இலங்கை டூ தனுஷ்கோடி-தனுஷ்கோடி டூ இலங்கை.... நீந்தி சென்று சாதனை படைத்த விமான படை வீரர்!

0 2891

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து பின் இலங்கைக்கு நீந்தி திரும்பிச்சென்ற இலங்கை விமானப்படை வீரர் ரோசன் அபேசுந்தரே சாதனை படைத்துள்ளார்.

இலங்கை விமானப்படை வீரர் ரோசன் அபேசுந்தரே. இவர் பல நீச்சல் போட்டிகளில் பங்குப்பெற்று, பல பரிசுகளை வென்றுள்ளார்.

கடந்த 1971 ஆம் ஆண்டு, இலங்கையை சேர்ந்த நீச்சல் வீரர் , குமார ஆனந்தன் தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி சென்று சாதனை படைத்தார்.

இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரின் 50 வருடகால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்தார். அதன்படி அதிகாலை 2:30 மணிக்கு தலைமன்னார் ஊர்முனை கடலில் குதித்து நீந்த துவங்கினார்.

இந்திய இலங்கை கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் மதியம் 12:30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலுக்கு வந்தார். இந்திய கடற்கரையில் ஏற அனுமதி வழங்கப் படவில்லை. எனவே கடலிலேயே ரோஷனுக்கு அந்நாட்டு வீரர்கள் ஜூஸ் கொடுத்தனர். பின்னர் மீண்டும் 12:40 மணிக்கு நீந்த துவங்கி அதிகாலை 3 மணிக்கு இலங்கை தலைமன்னார் சென்றடைந்தார். இதன் மூலம் முதன்முதலாக இலங்கை வீரர் 56 கி.மீ தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments