அயோத்தியில் ராமர் கோயில் 2024ல் கட்டி முடிக்கப்படும் - விஎச்பி தகவல்

0 1723
அயோத்தியில் ராமர் கோயில் 2024ல் கட்டி முடிக்கப்படும்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 2024ம் ஆண்டு முடிவடையும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைக்கு ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முடித்து கர்ப்பகிரகத்தில் ராமர் சிலை வைப்பதே முக்கியப் பணி என்று குறிப்பிட்டார்.

வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அலோக் குமார், ராமர் கோவிலைக் கட்டி முடிப்பதே முக்கிய வேலை என்றும் அதுவரை காசி மற்றும் மதுரா பற்றிய பிரச்னைகளில் தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments