ஜம்மு காஷ்மீரில் மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 973
ஜம்மு காஷ்மீரில் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹாதிபோரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில்  3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஏகே 47 துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அனந்தநாக் மாவட்டத்தில் செம்தான் பிஜ்பெஹ்ரா என்ற இடத்தில் (Semthan Bijbehara) பாதுகாப்பு படையினர் நடத்தும் என்கவுன்டர் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசாரும், துணைராணுவத்தினரும் இணைந்து என்கவுன்டரில் ஈடுபட்டனர். என்கவுன்டரில் வீரர்கள் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments