கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்க பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்

0 6678
கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்க பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்

கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்க பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

டேராடூன் , பாட்னா, டெல்லி ,மும்பை போன்ற பல நகரங்களில் இதனால் இரவு வாழ்க்கை முடங்கி, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. வாகனங்களைப் போலீசார் மடக்கி இரவில் நடமாட தடை விதிக்கப்பட்டதை விவரித்து  எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பலரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. கர்நாடகாவில் இரவு ஊரடங்கில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments