மேற்குவங்கத்தின் 4ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது வன்முறை: பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

0 5389

மேற்கு வங்கத் தேர்தலில் 4வது கட்ட வாக்குப்பதில் வன்முறை வெடித்ததால் மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கூச் பெஹார் பகுதிக்கு அரசியல் தலைவர்கள் செல்ல தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் உள்ள, 294 தொகுதிகளுக்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நான்கு மாவட்டங்களில் உள்ள, 44 தொகுதிகளுக்கு, நான்காம் கட்டமாக நேற்று, தேர்தல் நடந்ததது. 4ம் கட்டத் தேர்தலில், 76 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கூச்பெஹாரில் உள்ள ஒரு ஓட்டுச் சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த,  மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மீது, சிலர் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில், 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கூச் பெஹாருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் செல்ல தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடையுத்தரவு போட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, மாநில, சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாஜகவுக்கு கிடைத்து வரும் அமோகமான வரவேற்பைக் கண்டு மமதாவுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டிருப்பதாக சாடினார்.

இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களை ஏவி விட்டு வன்முறையை பரப்பி வருவதாக மோடி குற்றம் சாட்டினார். ஆனால் அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள் தூண்டுதலால்தான் வன்முறைகள் பெருகி வருவதாக மமதா பதிலுக்கு சாடியுள்ளார். வாக்காளர்களை பாஜகவினரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் மிரட்டி வருவதாக மமதா பானர்ஜி கூறியதையடுத்து வீரர்களை முற்றுகையிட முயன்ற திரிணாமூல் காங்கிரசுக்கு கண்டனம் வலுத்துள்ளது.

இது தொடர்பான புகாரை பெற்ற தேர்தல்  ஆணையம் விளக்கம் அளிக்க மமதா பானர்ஜிக்கு உத்தரவிட்டது. பல இடங்களில் இருந்து புகார்கள் வந்ததால் தாம் அப்படி பேசியதாக மமதா பானர்ஜி விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments