கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் 11 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்

0 1370

கர்நாடக மாநிலத்தில் முக்கிய நகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கலாபுராகி, மங்களூர், பெங்களூர் ,மைசூர் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். 11 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை  ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. பெங்களூருக்கு உள்ளே வரும் பயணிகள் உரிய பயண ஆவணங்களுடன் வரவேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இரவுப்பணிக்குச் செல்வோர் பத்து மணிக்குள் சென்றுவிட வேண்டும் என்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments