இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய தடுப்பூசி முகாம் நடைபெறும்: பிரதமர் மோடி

0 1613

பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனையில் கேட்டுக் கொண்டபடி இன்று முதல் நாடு தழுவிய அளவிலான கொரோனா தடுப்பூசி முகாம் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகடள செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமான நபர்களுக்கு இந்த மூன்று நாட்களிலும் தடுப்பூசி போட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 85 நாட்களில் இந்தியாவில் பத்து கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட அமெரிக்கா 89 நாட்களையும் சீனா 102 நாட்களையும் தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments