மறைந்த இளவரசர் பிலிப்புக்கு பிரிட்டன் ராணுவம் சார்பில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகள் முழங்கி மரியாதை..!

0 2881
மறைந்த இளவரசர் பிலிப்புக்கு பிரிட்டன் ராணுவம் சார்பில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகள் முழங்கி மரியாதை..!

ங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்தினர் சார்பில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

லண்டன், எடின்பர்க் கார்டிஃப் உள்ளிட்ட நகரங்களில் சிறிய பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், பக்கிங்காம் அரண்மனை உள்ளிட்ட அரச குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் பூங்கொத்துகளை வைத்து இளரவசர் பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் 1997ஆம் ஆண்டு 50ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் உடன் இளவரசர் பிலிப் எடுத்துக்கொண்ட புகைப்படம், அரச குடும்பத்திற்கு சொந்தமான டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments