மருத்துவர்கள் மீதான தாக்குதல்: குண்டர் சட்டம் பாயும்... எச்சரிக்கும் ஆட்சியர்

0 2569
மருத்துவர்கள் மீதான தாக்குதல்: குண்டர் சட்டம் பாயும்... எச்சரிக்கும் ஆட்சியர்

ருத்துவர்களை தவறாக பேசினாலோ, தாக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ராகவன், மாதேஸ்வரன் என்ற இளைஞர்கள் விபத்தில் அடிபட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர்கள் இருவரும் அப்போது பணியில் இருந்த பயிற்சி மருத்துவர் அருண் பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கவும் முயற்சித்துள்ளனர். தடுக்க வந்த மருத்துவமனை ஊழியர்களுக்கும் அடி விழுந்தது.

இந்த நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். மருத்துவர்களை தவறாக பேசினாலோ, தாக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments