”மெட்ரோ ரயில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்” -சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

0 1865
”மெட்ரோ ரயில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்” -சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில்நிலைய வளாகத்திலோ, ரயிலினுள்ளோ முகக்கவசம் அணியாமல் காணப்படும் பயணிகளிடம் ஞாயிற்றுக்கிழமை முதல் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என நுழைவு வாயிலியே சோதித்து உறுதி செய்து அனுப்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சோதனை மையத்தைக் கடந்து ரயிலுக்குள் ஏறியதும் பலர் முகக்கவசங்களை அகற்றி விடுகின்றனர் என்றும் சிலர் அவற்றை முறையாக அணிவதில்லை என்றும் அப்படிப்பட்டவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை முதல் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments