”புதிய கட்டுப்பாடுகளும் தளர்வுகளும்” -தமிழ்நாடு அரசு அறிவிப்பு

0 21405
மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் ஏற்கனவே வெளியான அறிவிப்பில் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சம்மந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் வழக்கமான நேரம் வரையிலோ, அதிகபட்சமாக இரவு 10 மணி வரையிலோ திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவிழாக்களுக்கும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

புதிய திரைப்படங்கள், முதல்ஏழு நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து திரையரங்குகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments