அரக்கோணம் சோகனூரில் தேர்தல் பகையில் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம்..!

0 8713
அரக்கோணம் சோகனூரில் தேர்தல் பகையில் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கொல்லப்பட்ட இருவரின் குடும்பங்களுக்குத் தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதை அடுத்து உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனையடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், கொலையானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணமும், மாத உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்பின்னர் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments