”நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி, பின்னரே ஏற்றுமதி பற்றி சிந்திக்கவேண்டும்” -சோனியா வேண்டுகோள்

0 1299
”நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி, பின்னரே ஏற்றுமதி பற்றி அரசு சிந்திக்கவேண்டும்” -சோனியா வேண்டுகோள்

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகே அதன் ஏற்றுமதி பற்றி அரசு சிந்திக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா நிலவரம் பற்றி காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அவர் காணொலியில் ஆலோசனை நடத்தினார். அப்போது இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களால் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சிக்கும் அதில் பங்கு உள்ளது என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments