ஆந்திராவில் வாகன தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.3.5 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்

0 4100
ஆந்திராவில் வாகன தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.3.5 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்

ந்திர மாநிலம் கர்னூல் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 3 கோடியே 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு கிலோ தங்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சலிங்க சோதனைசாவடியில் பெங்களூரு நோக்கி சென்ற பேருந்தில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், சேத்தன் குமார் என்பவரின் பையில் 3 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரம் பணமும், ஒரு கிலோ தங்கமும் இருப்பது கண்டறியப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, பணம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமானது என்றும் தங்க நகைகள் ஐதராபாத் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லெரி நகைக்கடைக்கு சொந்தமானது எனவும் அந்த நபர் கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments