சென்னையின் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

0 28891
சென்னையின் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

சென்னையின் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 61ஆயிரமாக உள்ளது. 4 ஆயிரத்து 302 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.31 சதவீதம் பேரும், பெண்கள் 40.69 சதவீதம் பேரும் ஆவர்.

இந்த நிலையில், தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 1430 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1398 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments