தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்; பெண்ணை தீயிட்டு கொளுத்தி அதே தீயில் உயிரிழந்த நபர்..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

0 4387
தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்; பெண்ணை தீயிட்டு கொளுத்தி அதே தீயில் உயிரிழந்த நபர்..! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் பெண்ணை தீயிட்டு கொளுத்திய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தைச் சேர்ந்த சாந்தி , கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஏற்கனவே, இருமுறை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு கணவன்களையும் பிரிந்த சாந்தி, மூன்றாவதாக முத்து என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனது 2-வது கணவர் ஸ்ரீராமுடன் சாந்திக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சகித்து கொள்ள முடியாத முத்து, நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து சாந்தி மீது ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார்.

முத்து மீதும் தீ மளமளவென பரவிய நிலையில், இருவரும் உயிரிழந்தனர். அருகில் உறங்கிக் கொண்டிருந்த 4 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments