மாஸ்க் அணியாவிட்டால் உங்களை தேடி நான் வருவேன்..! எச்சரிக்கும் எமதர்மன்!

0 1877

மாஸ்க் அணியவில்லை என்றால் உங்களை தேடி நான் வருவேன்..! எனது வேலையை அதிகரிக்க செய்யாதீர்கள்..! உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் முகக்கவசம் அணியுங்கள் என்று எமதர்மனே வந்து அறிவுரை கூறிய சம்பவம் உத்திரப்பிரத்தேசத்தில் நடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த நில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து நாளொன்றுக்கு ஒரு லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஏப்ரல் 10ம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்றின் வேகம் தீவிரமெடுத்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மும்பை போன்ற பகுதிகளில் முழு ஊரடங்கு அறிக்கப்பட்ட நிலையில் பொதுவெளியில் வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி உத்திரபிரதேசத்தில் எமதர்ம ராஜவே வந்து அறிவுறுத்துவது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் மொரபதாத் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உள்ளூர் நாடக கலைஞர் ஒருவர் எமதர்மன் வேடமணிந்து கையில் கதாயுதத்துடன் வீதி வீதியாக சென்று அனைவரும் முககவடம் அணியும்படி வலியுறுத்தினார்.

முகக்கவசம் அணியாவிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்க கூடும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ”நீங்கள் முகக்கவசம் அணியுங்கள், அவ்வாறு செய்யா விட்டால் நான் உங்களை தேடி வரக்கூடும். எனது வேலையை அதிகரிக்க செய்யாதீர்கள். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்” என உரக்க கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எமதர்மன் வேடம் அணிந்தப்படி அந்த நபர் மேற்கொண்ட விழிப்புணர்வை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments