அதிகரித்து வரும் கொரோனா: சென்னையில் ஆயிரத்தை நெருங்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை

0 2121
சென்னையில் ஆயிரத்தை நெருங்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை

சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 931ஆக உயர்ந்துள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments