தமிழக அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க வேண்டுமா? சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

0 2733
தமிழக அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க வேண்டுமா?

தமிழக அரசு அலுவலங்களில், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க வேண்டுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என கடலூரை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவர்களின் படங்களையும் வைக்கலாம் என கடந்த 1978 ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்ததாக அவர் தமது மனுவில் கூறினார்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், அரசு ஆணை இருந்தாலும், அது கட்டாயமாக்கப்படவில்லை தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைப்பது குறித்து அந்தந்த அலுவலக அதிகாரிகளே முடிவு செய்யலாம் என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments