தமிழக அரசின் அறிவிப்பை மீறி பேருந்துகளில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

0 10954
தமிழக அரசின் அறிவிப்பை மீறி பேருந்துகளில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

தமிழக அரசு வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மாநிலம் முழுவதும் தற்போது பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி பேருந்துகளில் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இன்று முதல் அமலுக்கு வந்த இந்த உத்தரவை பெரும்பாலான பயணிகளும், போக்குவரத்து ஊழியர்களும் கடைப்பிடிக்கவில்லை. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சில பேருந்துகளில் பயணிகள் படிக்கட்டுகள் வரை நின்றபடி சென்றனர்.

பயணிகளும், பேருந்து ஊழியர்களும் முகக்கவசத்தை சரிவர பொருத்திக் கொள்ளவில்லை. பெரும்பாலான பேருந்துகளில் கிருமி நாசினி இல்லாமல் பாட்டில்கள் வெறுமையாகக் காட்சியளிக்கின்றன. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வரும் நிலையில் விதிமுறைகளை கறாராகக் கடைபிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments