ஐ.பி.எல். தொடக்கப் போட்டியில் பெங்களூரு அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி

0 3643
ஐ.பி.எல். தொடக்கப் போட்டியில் பெங்களூரு அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி

ஐ.பி.எல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

வாண வேடிக்கையின்றி, ரசிகர்களின்றி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 49 ரன்கள் குவித்தார். பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் தொடக்க விக்கெட்டுகள் விறுவிறுவென சரிந்த போதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். கடைசி பந்து வரை ஆட்டம் சென்ற நிலையில் இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments