மதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்தில் மிதித்து கொலை செய்த இளைஞர்

0 24455
மதுபாரில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஒருவரை கழுத்தில் மிதித்து கொலை செய்த இளைஞர்

சென்னையில், மதுபான பார் ஒன்றில் மது அருந்தியவரிடம் இருந்து ஆம்லேட்டை பறித்து சாப்பிட்டவரை, கழுத்தில் மிதித்து கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

சென்னை புழல் லஷ்மிபுரத்தில் சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாக அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார்,அதனைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்‍. விசாரணையில் உயிரிழந்தவர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த அன்பழகன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்குள்ள கடை ஒன்றில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது. இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், உயிரிழந்தவரை காலால் கழுத்தில் மிதித்துக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது

அங்கு கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து அன்பழகனை மிதித்து கொலை செய்ததாக அசோகா தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். மதுபாரில் கிருஷ்ணமூர்த்தி வாங்கிய ஆம்லேட்டை, அன்பழகன் பறித்துச் சாப்பிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில், அன்பழகனை மிதித்து கொன்றதாகவும் கிருஷ்ணமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளியான அப்பு என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments