மேற்குவங்கத்தில் 4வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

0 3481
மேற்குவங்கத்தில் 4வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

மேற்குவங்கத்தில் நான்காவது கட்டமாக இன்று 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலையிலேயே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரண்டு வருகின்றனர். ஹுக்ளி தொகுதி பாஜக வேட்பாளரான லாக்கெட் சட்டர்ஜி, வாக்களிப்பதற்கு முன்பு கோவிலில் வழிபாடு செய்தார்.

நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் சீல் வைக்கப்பட்ட நிலையில் மேற்குவங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவின் மத்திய அமைச்சரும் பாடகருமான பாபுல் சுப்ரியோ,இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களுடன் 371 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

சுமார் ஒருகோடியே 15 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments