பிரதமரிடம் ரகசியம் பேசுவது போன்ற இஸ்லாமியரின் வைரலான புகைப்படம் குறித்து விவரம் வெளியாகி உள்ளது

0 18922

மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் மோடியிடம் என்ன பேசினார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

பிரதமரின் காது அருகே சென்று ஏதோ ரகசியமாக பேசுவது போன்ற இஸ்லாமியரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து அசாதுதின் ஓவைசி உள்ளிட்ட பலர் ஊகத்துடன் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரதமருடன் பேசிய அந்த நபர் ஜல்பிகர் அலி ( Zulfiqar Ali )என்பது தெரியவந்துள்ளது.

பிரதமர் தன்னிடம் தனது பெயர் மற்றும் விருப்பம் குறித்து கேட்டதாகவும், அதற்கு எம்எல்ஏ, கவுன்சிலர் சீட் எதுவும் வேண்டாம், தன்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும் என்று கூறியதாகவும் ஜல்பிகர் அலி தெரிவித்தார்.

40 வினாடிகள் பிரதமருடன் பேசிய தருணம் 40 ஆண்டுகள் வரை தனது நினைவில் இருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments