முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்

0 3197

தமிழ்நாட்டில் போதியளவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுவரையில், 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கும் சூழலில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோசை போட்டுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments