கொரோனாவை கட்டுப்படுத்த 4 வகையான திட்டங்களுடன் தமிழக அரசு களம் இறங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 15355

கொரோனாவை கட்டுப்படுத்த 4 வகையான திட்டங்களுடன் தமிழக அரசு களம் இறங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரிசோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே கொரோனா நோயாளிகளை அடையாளம் காணமுடியும் என்றார். 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றும், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை அதிகமாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் பாதிப்பை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments