தாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் அண்ணன், தங்கை விபரீத முடிவு..

0 5344
தாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் மனமுடைந்த அண்ணன்- தங்கை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் மனமுடைந்த அண்ணன்- தங்கை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரந்தை சறுக்கை பகுதியில் வசித்து வந்த கனகராஜ்- காந்திமதி தம்பதி, 15 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களின் மகள் இந்துமதியும், மகன் கரன்ராஜூம், தாய் காந்திமதியிடம் வளர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 18 வயது பூர்த்தியானதால் தந்தை வீட்டுக்குச் செல்லுமாறு இருவரையும் காந்திமதி விரட்டியதை தொடர்ந்து தந்தை கனகராஜிடம் அடைக்கலமாகியுள்ளனர்.

ஆனால், சொத்தை அபகரிக்க வந்துவிட்டதாக கூறி இருவரையும் வீட்டை விட்டு கனகராஜ் துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் திக்கற்ற நிலையில் விஷமருந்தி மயங்கிய இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments