கொரோனா விதிகளை மீறியதாக நார்வே பிரதமருக்கு அபராதம் விதிப்பு

0 2122

நார்வே நாட்டு பிரதமருக்கு கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் ( Erna Solberg )கடந்த பிப்ரவரி மாதம் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். கொரோனா பாதிப்பு காரணமாக, 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லை அறிவிக்கப்பட்டிருந்த போதும், கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளை கொண்டாடியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதனையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பிரதமர் எர்னா சொல்பேர்க்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments