உடல்நலம் குன்றி உயிரிழந்த கணவர்.. ஆதரவை இழந்ததால் மனைவி, மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

0 3958
திருப்பூரில் கூலித் தொழிலாளி உடல்நலம் குன்றி உயிரிழந்த நிலையில், விபத்தில் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, அவரது ஆதரவில் வாழ்ந்து வந்த மனைவி, மகன், மகள் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறி இருக்கிறது.

முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சேர்ந்த பனியன் நிறுவன கூலித் தொழிலாளியான ராகவன் கடந்த ஆண்டு உடல்நலம் குன்றி உயிரிழந்து விட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் அவரது மனைவி செல்வியின் இடது கை முறிந்து, மகன் அஸ்வினின் ஒரு கால் முறிந்து, மகள் அகல்யா ஒரு கையையே இழந்திருக்கிறார். அந்த மூவருக்கும் ராகவன் தான் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்.

அவர் இறந்துபோனதால் ஓராண்டாக மூவரும் பெரும் இன்னல்களை சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தனது தங்கையிடம் போனில் தகவல் சொல்லிவிட்டு, மகன், மகளுடன் செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments